முன்னுரை


“உலகமெல்லாம் சென்று நற்செய்தியை பரப்புங்கள்... என்றார் இயேசு. இறையாட்சி பற்றிப் பறைசாற்றவும் , உடல்நலம் குன்றியோரின் பிணி நீங்கவும், பேய்களை ஒட்டவும் , தன் அப்போஸ்தலர்களுக்கு அதிகாரம் அளித்தார். இவ்வதிகாரத்தை தம் செபத்தால், தூய்மையான உள்ளத்தால், விசுவாசத்தால் பெற்றுக்கொண்ட கோடி அற்புதர் புனித அந்தோணியார் குறைவில்லாமல் கேட்போருக்கும், நம்பிக்கையோடு வேண்டுவோருக்கும் தம் பரிந்துரையால் இறைவனிடம் பரிந்துபேசி "இறைவார்த்தையை இவ்வுலகம் முழுவதும் பரவ இயேசுவின் சீடர்கள் வழியில் இறைத்தூதராய் இம்மண்ணில் அவதரித்து

வரம் நல்கும் வள்ளலாம் நம் புனிதர் கோடி அற்புதரான பதுவை புனித அந்தோணியார்

இயற்கையின் அழகில் தென்னைமரங்கள் சூழ பசுமையான வயல்வெளிகளில் நடுவே வானளாவிய கோபுரங்கள் உயர்ந்து நிற்க

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை போகும் வழியில் இறையருளை பெற்றுத்தரும் புனித அந்தோணியார் திருத்தலம் தஞ்சை மறைமாவட்டம், வீரக்குறிச்சி - சுக்கிரம்பட்டியில் பொற்ப் பீடம் அசைக்கப்பட்டு அவற்றின் நடுவே புனித அந்தோணியார் அழகுற வீற்றிருந்து இத்திருத்தலம் நாடிவருவோருக்கும் / நம்பி வருவோருக்கு இறையருளை பெற்றுத்தருகிறார்.

புனித அத்தோணியர் வரலாறு


a) கோடி அற்புதர் என்ற அழைக்கப்படும் புனித அந்தோணியார் ஐரோப்பாவிலுள்ள போர்த்துக்கல் நாட்டின் தலைநகரான லிஸ்பன் நகரில் கி.பி. 1195 ஆகஸ்ட் ௧௫ ஆம் நாள் மரியன்னையின் விண்நேர்புத் திருநாள் அன்று பிறந்தார். இவருடைய தந்தையார் மாட்டின் திபியோன் லிஸ்பன் நகரத்து ஆளுநர். இவருடைய தாய் தேவார தெரசம்மாள்.

b) கி.பி. 1195 ஆகஸ்ட் மாதத்தில் திருமுழுக்கு பெற்று பேர்த்தினான்ட் தெமல்லி யோயினஸ் என்று அழைக்கப்பட்டார். கி.பி. 1210 ம் ஆண்டு புனித அகஸ்தினார் மடத்தில் சேர்ந்து துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். தனது 24 ஆம் வயதில், கி.பி 1219 ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்றார்.

c) கி.பி. 1221 முதல் 1226 - ஆண்டுகளில் சிறந்த மறையுரையாளராக திகழ்ந்தார், எனவே இவருடைய மறையுரையை கேட்க மக்கள் கூட்டம் கூட்டமாய் அலைகடலென வந்து குவிந்தார்கள்.

St. Antony Shrine

d) கி.பி 1225 இல் புனித பிரான்சிஸ் அசிசியாரின் மரணம் புனித அந்தோணியாரின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன்பின் பிரான்சிலிருந்து இத்தாலி வந்தார். இங்கு செபித்துக்கொண்டு இருக்கும்போதுதான், குழந்தை இயேசு அவர் கைகளில் தவழ்ந்து விளையாடினர்.

e) கி.பி. 1227 இல் பிரான்ஸிகன் சபையில் பொது மேலாளராகப் பொறுபேற்றார், உரோமைக்கு பயணமானார். திருத்தத்தையைச் சந்திக்கிறார். தன் கடைசிகாலத்தை இத்தாலியில் உள்ள பதுவை நகரில் கழித்தார். கி.பி. 1231 ஜூன் 13 இல் இறைவன் இவரை அழைத்தார். ஜூன் 17 ஆம் தேதி நல்லடக்கம் செயப்பட்டார்.

f) இவர் தன்னுடைய 36 ஆண்டு உலக வாழ்க்கையில் செபிப்பதிலும், நற்செய்திபணி செய்வதிலும் அதிகம் செலவிட்டதால் இறைவன் இவருக்கு அற்புதங்கள் செய்யும் வரத்தை கொடுத்துள்ளார்.

அவர் இறந்த குறுகிய காலத்தில் பதுவை புனித அதோணியரிடம் பலரும் வேண்டினர். அவருடைய பரிந்துரையால் பூரண சுகமும், வேண்டியது கிடைத்ததும் புதுமைகள் நிகழ்ந்தன. அதன்பின் திருச்சபை அவருடைய உடலை கல்லறையிலிருந்து வெளியே எடுத்தபோது அவருடைய நாவு அழியவில்லை. இன்றும் அப்படியே உள்ளது. எனவே கி.பி. 1232 மே மாதம் 30 ஆம் நாள் அவருக்கு புனிதர் பட்டமும், 1946 ஆண்டு ஜனவரி 16 மறைவல்லுநர் பட்டமும் அளிக்கப்பட்டது.

St. Antony Shrine

இன்றும் உலக நாடுகளில் எல்லாம் பார்போற்றும் புனிதரான, கோடி அற்புதர் பதுவை புனித அதோனியார் வீரக்குறிச்சி - சுக்கிரப்பட்டியில் அமர்ந்து ஓடோடி வரும் பக்கதர்களுக்கு ஒளிசுடராய் விளங்கிக்கொண்டு உள்ளார்.

புனித அந்தோணியார், (அவர் வாழ்ந்த காலத்தில் செய்த புதுமைகள்)


1. சாத்தானை சிலுவை அடையாளத்தின் ஆற்றலினால் விரட்டினர்.

2. நற்கருணை ஆண்டவரின் பிரசன்னத்தை ஆராதிக்க ஆலயத்தின் சுவர் இரண்டாக விலகி நின்றது ஓர் ஆச்சரியம்.

3. நோயாளிகளை தலையில் தன் தொப்பியை வைத்தார். நோயாளி குணமானார் ஓர் அதிசயம்.

4. புயலிலிருந்து புதுமையாக உயிர்தப்பினார்.

5. காணாமல்போகும் பொருட்களை கண்டெடுக்க செய்யும் ஆற்றல்மிக்கவராக அடோனியர் விளங்கினார்.

6. ஏதிர்காலத்தை கணிக்கும் ஏற்றம் கொண்டார்.

St. Anthony

7. மரித்தோறை உயிப்பித்தர்.

8. ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் உடலோடு பிரசனமான அற்புதம்.

9. கன்னிமரி உடலோடும், ஆன்மாவோடும் விண்ணகம் எடுத்துக்கொள்ளப்பட்ட மறையுண்மைக்கு அன்னை மரியாளே புனித அதோனியருக்கு தெளிவுபடுத்திய ஆச்சரியம்.

10. உடைந்த பாத்திரம் ஒட்டியது.

11. நற்கருணையின் முன் கழுத்தை மண்டியிட்டது.

12. மக்களுக்கு மறையுரை ஆற்றும்போது மக்களும், புனிதரும் நனையவில்லை மழையில்.

13. தூய அந்தோணியார் கையில் அமர்ந்து அற்புத குழந்தை இயேசு பேசியது.

14. கொதிநீரில் (சுடும் தண்ணீரில்) விளையாடியது குழந்தையை காப்பாற்றியது.

15. குழந்தையை உயிரோடு எழுப்பியது.

இவர் இறந்தபின்னும் புதுமைகள் புரியும் வரம் பெற்றதால் கோடி அற்புதர் எனப் பெயர் பெற்றார்.