திருவிழாக்கள்


Annual Feast

பதுவை புனித அந்தோணியாரின் ஆண்டுத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவிற்கு பின்வருகின்ற 40 ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது. திருவிழாவின் தொடக்கமாக கொடிபவணி சுற்றிவர, வெண்கல கொடிமரத்தின் கொடியேற்றப்படுகின்றது.

அதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நவநாள் மாலை 06.௦௦ கொடி பவனி, கொடியேற்றமும், அதை தொடர்ந்து திருவிழா திருப்பலியும்.

அன்று இரவு 11 மணிக்கு தேர்ப்பவனியும் நடைபெறுகின்றது.

அடுத்த நாள் காலை 06 .00 மணிக்கு திருப்பலியும், 08.30 திருவிழா நன்றி திருப்பலியும் அதை தொடர்ந்து கொடி இறக்கமும் நடைபெறும்.

ஆண்டு பெருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள், விவசாயப் பெருமக்கள் மாட்டுபவண்டிகளிலும், வாகனங்களிலும் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், மொழி, இனம், மதங்களை கடந்து கலந்துகொண்டு புனித அந்தோணியார் வழியாக இறையாசீரை பெற்றுச் செல்வதோடு பெற்றுக்கொண்டதன் நன்றியாக புனித அந்தோணியாருக்கு அன்னதானம் இட்டும், மொட்டை அடித்தும் தம் நேர்ச்சையை செலுத்துகின்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன்னரே வீரக்குறிச்சி - சுக்கிரம்பட்டி புனித அந்தோணியாரின் திருத்தலம் தமிழக அரசால் வழிபாட்டு சுற்றுலா தளமாக அறிவிக்கப்பட்டு, தமிழக அரசு கெஜட்டில் அறிவிப்பு ஆணையும் வெளியிடப்பட்டுள்ளது.

வீரக்குறிச்சி - சுக்கிரன்பட்டி புனித அந்தோணியார் திருத்தலத்தில்


1. இறைமக்கள் பகல், இரவு தங்குவதற்கு தங்கும் கூடாரமும்,

2. உணவிற்காக கேன்டீனும்

3. காணிக்கை பொருட்களை பெற மெலுகுதிரி, எண்ணெய், படங்கள், கிறிஸ்துவ பக்தி பாடல்கள் அடங்களிய CD கள் உள்ள டிப்போவும்

4. அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.