வீரமாமுனிவரின் வரலாறும் & வீரக்குறிச்சியில் பதுவை புனித அந்தோணியார் சுரூபம் வந்த வரலாறும்.


இத்தாலி நாட்டின் மண்டுவா மாவட்டத்தின் காஸ்திகிளியோன் என்னும் ஊரில் கி.பி 1680 நவம்பர் மாதம் 8 ஆம் நாள் அன்று வீரமாமுனிவர் என்ற அழைக்கப்படும் கான்ஸ்டாண்டியுஸ் ஜோசப் பெஸ்கி அடிகளார் பிறந்தார். இவருடைய தந்தையர் பெயர் டான் கொண்டல்போ பெஸ்கி, தாயார் பெயர் எலிசபெத்தம்மாள்.

தன்னுடைய 18 ஆம் வயதில் 21.10.1698 ஆம் ஆண்டு இயேசுவின் நற்செய்தி பணியை தொடர்ந்தார் இயேசு சபையில் சேர்ந்தார். கி.பி. 1709 இல் குருவானார். அதன்பின் இந்திய தேசத்திற்கு வந்த இயேசுவின் சீடர் புனித தோமையார், புனித சவேரியார், வேதகட்சியாக மரித்த புனித ஜான் டி பிரிட்டோ (அருளானந்தர்) வழியில் இவரும் கி.பி. 1710 போர்த்துக்கல் நாட்டு லிஸ்பின் துறைமுகத்திலிருந்து கோவாவிற்கு புறப்படும் கப்பலில் இந்தியாவிற்கு புறப்பட்டார்.

Veeramanunivar

கோவா வந்தடைந்த வீரமாமுனிவர் அங்கிருந்து கேரளாவில் உள்ள அம்பலக்காட்டு குருமடம் சென்றார். அங்கிருந்து கிழக்கிலுள்ள இன்றைய தூத்துகுடி மறைமாவட்டம் மணப்பாடு பயணமாகி கி.பி. 1711 மே மாதம் 8 ஆம் நாள் மதுரை மறைப்பணி மண்டலத்தில் இவர் பணியேற்றார்.

மதுரை மிஷன் என்று அழைக்கப்பட்ட மதுரை மறைப்பணி மாநிலம் கன்னியாகுமரிக்குச் சற்று வடக்கிலிருந்து, மேற்கு மலைத்தொடர்க்குக் கிழக்கே, ஆர்க்காட்டு வேலூர் பாண்டிச்சேரி உள்ளிட்ட சோழ மண்டலக் கரையடங்கிய பெரும் பரப்பளவு அடங்கியது. இதில் 10 குருக்கள் மட்டுமே மதுரை மிஷனில் இருந்தார். இவர்கள் 10 இடங்களை மையமாகக் கொண்டு பணி செய்தனர்.

அவை மதுரை, மறவநாடு என்ற அழைக்கப்பட்ட இராமநாதபுரம், காமநாயக்கன்பட்டி, மலையடிப்பட்டி, ஆவூர், கூறைப்பட்டி, அய்யம்பட்டி, வடுகர்பேட்டை, கல்பானையும் ஆகும். இதில் வீரமாமுனிவர் எந்நாளும் பயணம் செய்துகொண்டேயா பணிபுரிந்தார்.

அவ்வாறு பணி செய்கின்றபோது, புனித அருளானந்தர் வாழ்ந்த வேதசாட்சியாக மரித்த மறவ நாட்டு மக்களை சந்திக்க இன்றைய சிவகங்கை மாவட்டம் திருந்தம்பட்டி என்ற ஊருக்கு வந்தபொழுது அப்பகுதியை பாதுகாத்து வந்த படைத்தலைவன் இவரையும், இவரோடு வந்த உபதேசியாரையும் சிறைபிடித்து, மரணதண்டனை விதித்தார். ஆனால் மதுரை மன்னர் சமய பொறையுடைய விஜயரங்க சொக்கநாத நாயக்கரின் முயற்சியால் வீரமமுனிவரும் அவரோடு வந்த உபதேசியரும் விடுவிப்பட்டார்கள்.

பின்னர் மறவ நாட்டின் உள்ள கிறிஸ்துவர்களை சந்தித்து, சமயப்பணியாயாற்றினார். 1693 இல் தலை வெட்டுண்டு வேதக்கட்சியாக மரித்த ஜான் டி பிரிட்டோ (அருளானந்தர்) பணியாற்றிய பகுதிகளில் நடந்த புதுமைகளை தொகுத்து "வேத விளக்கம்" என்ற நூலில் குறித்துள்ளார். அருளாந்தருக்கு முத்திபேரு பட்டம் அளிப்பது பற்றி விசாரணை செய்ய உரோமையிலிருந்து அனுப்பப்பட்ட குழுவிற்கு தேவையான தகவல்களை வீரமாமுனிவர் தொகுத்து கொடுத்ததுடன் வேத சாட்சியின் வாழ்க்கைத் தொடர்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றார்.

St. Antony Shrine

பில்லாவடந்தையில் (அய்யம்பேட்டை பகுதி) பணியாற்றி - கொள்ளிடக்கரையில் உள்ள எயிலூர், கோடாலி, கூவத்தூர் ஆகிய ஊர்கள் வழியாக தென் ஆற்காட்டு மாவட்டத்திலுள்ள கோணான்குப்பம் என்ற ஊரையடைந்தார். அங்கே பாளையக்கார்களின் ஆதரவில் தேவதாய்க்கு ஆலயம் ஏழுப்பி பெரிய நாயகியம்மாள் என்று பெயரிட்டு அன்னைக்கு விழா கொண்டாடினர்.

அதன்பின் வடுகர்பேட்டையில் மறைபணியாற்றினார், பின் 1732 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் அரசியல்நிலைமை அமைதியரற்றதாகவும், உறுதியற்றதாகவும் இருந்தது. தஞ்சை மராட்டியர் படை, மதுரை நாயக்கர் படை, திருச்சிராப்பள்ளி நாயக்கர் (பேட்டி) படை, ஆர்காட்டு முஸ்லீம் படை, மெய்சோர் மைசூர் ஹெய்சளர் படை ஆகிய 'ஐம்படை' களால் தமிழக மக்கள் அவதியுற்று நிலையில் வீரமாமுனிவர் ஆவூரில் மறைபணியாற்றினார். புதுக்கோட்டை தொண்டைமாளின் படையினர் முஸ்லீம் படையின் மாடுகளை கவர்ந்து சென்றனர். ஆனால் முஸ்லீம் படைகளின் மாடுகளை ஆவூர் மக்கள்தான் கவர்ந்து சென்றனர் என்று எண்ணி ஆவூரை சூறையாட முஸ்லீம் படைதளபதி புறப்பட்டபோது வீரமாமுனிவர் இதமாய் உண்மையை எடுத்துரைத்தார். அதனால் படைதளபதி அடியாரின் மிகுந்த மரியாதை கொண்டு, படைத்தளபதி அவர்களின் அரசரான சந்தா சாஹிப்பை சந்திக்கும் வாய்ப்பை பெற்றுக்கொடுத்தார்.

இதனால் சந்தா சாஹிப்பிற்கும், வீரமமுனிவருக்கும் இடையே நட்பு உண்டானது. அவருக்கு "இஸ்மதி சந்நியாசி" என்ற பட்டத்தையும், வீரமாமுனிவர் வேண்டிக்கொண்டவாறு கிறிஸ்துவர்களுக்கு எவ்வித இடையூறும் செய்யாதவாறு தன் படைகளுக்கு சந்தா சாஹிப் உத்தரவிட்டார். அவருக்கு தேவையான பொருள் உதவியும் செய்துகொடுத்தார்.

St. Antony Shrine

அக்காலத்தில்தான் ஏலாக்குறிச்சியில் தங்கி அதனை சுற்றியுள்ள 100 சதுரகிலோமீட்டர் உட்பட்ட பகுதிகளில் கிறிஸ்துவத்தை பரப்பினர் என்றும் 1712 - 1742 ஆண்டுகள் சுமார் 6000 புதிய கிறிஸ்துவர்களை கிறிஸ்துவ மதத்தில் சேர்ந்தார் என்றும் கூறப்படுகிறது.

இவர் ஏலாக்குறிச்சியில் தூய அடைக்கல அன்னை ஆலயமும், ஆவூரில் தூய அடைக்கல அன்னை ஆலயமும் கட்டி எழுப்பினர். கி.பி. 1740 இல் சந்தா சாஹிப் திருச்சிராப்பள்ளியிலிருந்து அவரை மராட்டியர்களின் தலைவரான ராகோஜி பான்ஸ்லே கைது செய்து சதாராவிற்கு கொண்டு சென்றார்.

இதே சமயத்தில் வீரமாமுனிவர் மணப்பாடு வட்டாரத்தில் மறைப்பணியாற்றச் சென்றார். பின் 30 ஆண்டுகள் இடையறாது பணியாற்றியதால் ஓய்வுக்காக மணப்பாட்டிலிருந்து அம்பலக்காட்டிற்கு அனுப்பப்பட்டார். அங்கே உள்ள குருத்துவ கல்லுரியில் குருமாணவர்களுக்கு இறையியல் கற்பித்தார். தமது 67வது வயதில் 1747 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆம் நாள் இறைவன் இயேசுவினில் இளையப்பாறினர்.

இவருடைய கல்லறை அம்பலக்காட்டில் உள்ள சம்பாவூரில் உள்ளது என்று அதிகாரப்பூர்வமான அறிக்கை வாயிலாக உறுதியாக அறியலாம்.